mekedathu dam counstruction tamilnadu all party leaders meet pm narendra modi

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த திங்கள்கிழமை காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக் கூடாது உட்பட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் குழு நாளை (15/07/2021) டெல்லி செல்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து விமான மூலம் நாளை (15/07/2021) மதியம் அனைத்துக் கட்சிகளின் குழு டெல்லி செல்கிறது. பின்னர், நாளை மறுநாள் (16/07/2021) பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அனைத்து கட்சிகளின் குழு சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது.

Advertisment

மேகதாது அணைப் பகுதியில் அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், தமிழக அனைத்துக் கட்சிகளின் குழு பிரதமரைச் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.