ADVERTISEMENT

பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் காவிரியில் மேகதாது அணை!?;தம்பித்துரை பேட்டி.!!

05:05 PM Nov 28, 2018 | sakthivel.m

பாராளுமன்ற தேர்தல் வரஉள்ளதால் அதற்காக காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கலாம் என வேடசந்தூரில் மக்களவை துணை சாபாநாயகர் தம்பித்துரை கூறினார்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பேரூராட்சி பகுதியில் காசாநகர், அண்ணாநகர், சந்தைப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை ஏற்றுப்பேசினார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னம்பட்டி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான ப.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினார்கள்.

ADVERTISEMENT

மக்களை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் துணை சபாநாயகர் மு.தம்பித்துரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு மத்திய அரசின் குழுவினர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அக்குழுவிடம் தேசிய பேரிடமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மத்திய குழுவினர் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த பின்னர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது எங்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு வேண்டும் என்று கேட்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கு வேண்டியதை செய்யவேண்டும்என்பதால் அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரமுடியாது. அதற்கு அனுமதிக்க முடியாது காரணம் உச்சநீதிமன்றம் தெளிவாகச்சொல்வியிருக்கிறது மற்ற மாநிலங்கள் ஒப்புதல் பெற்றுத்தான் செய்யமுடியும். ஒரு அரசியல் காரணமாகக்கூட இருக்கலாம் கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்காக மத்திய அரசு செய்து இருக்கலாம். ஆனால் அத்தகைய செயல் முடிவு வருந்தத்தக்கது அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மத்திய அரசின் இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தின் உரிமைகளை பெருவதற்காகத்தான் அதிமுக இருக்கிறது. ஆனால் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், தற்போது உள்ள பாஜக அரசாக இருக்கட்டும் தமிழகத்தை புறக்கணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் உண்மை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் எனக்கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT