Skip to main content

பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் காவிரியில் மேகதாது அணை!?;தம்பித்துரை பேட்டி.!!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

பாராளுமன்ற தேர்தல் வரஉள்ளதால் அதற்காக காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கலாம் என வேடசந்தூரில் மக்களவை துணை சாபாநாயகர் தம்பித்துரை கூறினார்.  

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பேரூராட்சி பகுதியில் காசாநகர், அண்ணாநகர், சந்தைப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை ஏற்றுப்பேசினார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னம்பட்டி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான ப.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினார்கள்.

 

thampidurai

 

மக்களை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் துணை சபாநாயகர் மு.தம்பித்துரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது...

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு மத்திய அரசின் குழுவினர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அக்குழுவிடம் தேசிய பேரிடமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மத்திய குழுவினர் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த பின்னர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது எங்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு வேண்டும் என்று கேட்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கு வேண்டியதை செய்யவேண்டும்என்பதால் அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். 

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரமுடியாது. அதற்கு அனுமதிக்க முடியாது காரணம் உச்சநீதிமன்றம் தெளிவாகச்சொல்வியிருக்கிறது  மற்ற மாநிலங்கள் ஒப்புதல் பெற்றுத்தான் செய்யமுடியும். ஒரு அரசியல் காரணமாகக்கூட இருக்கலாம் கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்காக மத்திய அரசு செய்து இருக்கலாம். ஆனால் அத்தகைய செயல் முடிவு வருந்தத்தக்கது அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மத்திய அரசின் இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தின் உரிமைகளை பெருவதற்காகத்தான் அதிமுக இருக்கிறது. ஆனால் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், தற்போது உள்ள பாஜக அரசாக இருக்கட்டும் தமிழகத்தை புறக்கணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் உண்மை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் எனக்கூறினார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.