/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/supreme court 896_2.jpg)
மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை ரத்துச் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், "கர்நாடக அரசு அளித்த விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். திட்ட அறிக்கையை கர்நாடக அரசுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். கர்நாடகா அறிக்கை சமர்ப்பித்தால் பரிசீலிக்கக் கூடாது என சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடகா அரசு வேறு ஏதேனும் அறிக்கை அளித்தாலும், அதனை பரிசீலிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us