Advertisment

"மேகதாது அணை விவகாரம்- ஒன்றாக இருந்தால் யாராலும் வீழ்த்த முடியாது"- அமைச்சர் துரைமுருகன்!

publive-image

தமிழநாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி இன்று (27/08/2021) கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

Advertisment

அப்போது பேசிய தமிழ்நாடு நீர்வளப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணை விவகாரத்தில் நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது. கட்சி வித்தியாசமின்றி ஒரே கருத்துடன் செயல்பட்டால் மேகதாது அணை பிரச்சனையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" எனக் கூறினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும்; இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும்" என்றார்.

Speech tn assembly minister duraimurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe