மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2022) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இது தொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜலசக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும் தெரிவித்துதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2022) கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.