Advertisment

உறுதியாய் நிற்கும் கர்நாடகா... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர்!

tngovt

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இருப்பினும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது என்ற நிலைப்பாட்டில்உறுதியாக செயல்பட்டுவருகிறது.

Advertisment

இந்நிலையில், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வரும் 12ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடுஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி காலை 10மணிக்கு தலைமைச் செயலகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Advertisment

dam karnataka TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe