Advertisment

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது!

Mega Vaccine Special Camp begins in Tamil Nadu!

Advertisment

தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (03/10/2021) 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிப் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20,000 மையங்களில் தடுப்பூசி முகாம் இரவு 07.00 மணி வரை நடைபெறுகிறது.

முதல் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் டோஸ், இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது. செப்டம்பர் 26- ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக 24.85 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மூன்று கட்ட முகாம்களில் 68 லட்சம் தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu vaccination camp coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe