நாளை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

vck

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்இன்று (01.03.2021) மதிமுகமற்றும் விசிக கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாளை (02.03.2021) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டப் பொருளாளர்கள் கூட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணி, தேர்தல் நிதி தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

meetings tn assembly election 2021 vck thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe