கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்பொழுது துவங்கியுள்ளது. எப்பொழுதும் இசைத்தட்டு மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படும் நிலையில், இந்த முறை நேரடியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரி பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர்.
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது உரையை படித்து வருகிறார். இந்நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.