Advertisment

அண்ணாமலை இல்லாமலே தொடங்கிய மாவட்ட தலைவர்கள் கூட்டம்

The meeting of district leaders started without Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாமலே பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

Advertisment

அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தே அதிமுக வெளியேறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி அமைப்பது மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் மாநில தலைவர்களிடமும், பாஜக நிர்வாகிகளிடம் இதுகுறித்து கருத்துக் கேட்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலை வராததால் கூட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. ஆனால் அண்ணாமலை வர அதிக நேரம்ஆனதாலும்,ஒரு மணிநேரத்திற்கு மேலாகும் என்ற தகவலாலும்அங்கிருந்து கேசவ விநாயகமும், எச்.ராஜாவும் வந்தே மாதரம் பாடலைப்பாடி கூட்டத்தைத் தொடங்கினர்.

meetings Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe