jlk

Advertisment

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசியது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்த நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க நீதிமன்றம் கடந்த வாரம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு நாளை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. காவல்துறை தரப்பில் அவரின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.