Advertisment

மீரா மிதுனின் காதலன் அபிஷேக் ஷியாம் கைது!

Meera Mithun's friend Abhishek Sham arrested

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்பொழுது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட மீராமிதுனிடம் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவில் தெரிந்தவர் ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர்.சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில்வாக்குமூலம் தராமல் மீரா மிதுன் அடம்பிடிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் தர மறுக்கும் மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்புதெரிவித்து வருகிறார் எனக்கூறப்படுகிறது.'தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன்' என தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தப் புகாரில் மீரா மிதுனின் ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மீரா மீரா மிதுன் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த புகாரில் அவரது ஆண் நண்பர் அபிஷேக்ஷியாம் கைதாகியுள்ளார்.

Advertisment

meera mithun police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe