Advertisment

மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை?

d

பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

Advertisment

இந்தப் புகார்குறித்து கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன், "தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விடுத்திருந்தார். இதற்கிடையே கேரளாவில் பதுங்கியிருந்த அவரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீீராமிதுன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாயவாய்ப்பு இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

meera mithun
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe