Published on 25/03/2022 | Edited on 25/03/2022

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசியது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்த நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்துள்ளனர்.