தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் இல்லத்திற்கு நேரில் சென்று, உடல் நலக்குறைவால் காலமான அவரது மனைவி மீனா சுவாமிநாதனின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, மருத்துவர் நா.எழிலன், தி இந்து குழுமத்தின் தலைவர் நா.ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மீனா சுவாமிநாதன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Advertisment