Advertisment

“ஆன்லைன் மூலம் வாங்கும் மருந்து தரமானதல்ல..” - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர் 

publive-image

அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வம் என்பவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலூக்கா மருந்து வணிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisment

அகில இந்திய அளவில் மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் தேர்தல் சென்ற மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் செயலாளர் செல்வத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் யாரும் போட்டியிடாத காரணத்தால் செல்வம் போட்டியின்றி ஏகமானதாகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்திற்கு வருகை புரிந்த செல்வத்தை கோபி தாலூக்கா மருந்து வணிகர் சங்கம் சார்பில் வரவேற்று பொன்னாடை அனிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Advertisment

பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பொருளாளர் செல்வம் பேசுகையில், “குறைந்த விலையில் ஆன்லைன் மூலமாக வாங்கும் மருந்துகள் தரமானதாகவோ அல்லது தரத்திற்கான எந்த உத்தரவாதமும் இருக்காது. எனவே மக்கள் மீண்டும் நேரடி மருந்துக் கடைகளைத் தேடிவரும் நிலையே ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.

medicine online
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe