உடல் எடையைக் குறைக்க எடுத்துக்கொண்ட மருந்து உயிரைக் குடித்த சோகம்

A medicine taken to lose weight is the tragedy of taking life

உடல் எடையைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே சோமங்கலத்தைச் சேர்ந்தவர் சூர்யா. 20 வயதான இவர் தனியார் பால் பாக்கெட் விநியோகிக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் தன்னை அதிக பருமனாக இருப்பதாகக் கருதியதால் தனியார் நிறுவனத்திடம் சென்று உடல் எடையைக் குறைப்பதற்காக ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். இதன் பின் அந்தநிறுவனம் வழங்கிய மருந்துகளை 10 நாட்கள் சூர்யா உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மருந்துகளை உட்கொண்டதால் வேகமாக உடல் எடை குறைந்துள்ளது.

இந்நிலையில் சூர்யாவிற்கு ஜன.1 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா உயிரிழந்தார்.

சோமங்கலம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Chennai hospital
இதையும் படியுங்கள்
Subscribe