Advertisment

கோவில்பட்டியில் மருத்துவ குழுவினர் மீது தாக்குதல்!!!

இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு மருத்துவ பணியாளர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொஞ்சம் 'எல்லை' மீறிச்சென்றுள்ளனர்.

Advertisment

medical team in Kovilpatti

கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பினார். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், குடும்பத்தில் உள்ள 5 பேரை தனிமைப்படுத்திட சுகாதார துறையினர் முடிவு செய்து, நேற்றே தொலைபேசியில் அழைத்து சொல்லி இருக்கின்றனர். இன்று அந்த கிராமத்திற்கு தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சுகாதார குழுவினர் சென்றனர். 3 மணிநேரம் காத்திருந்தும் அந்த கிராம மக்கள், வாக்குவாதம் செய்ததோடு சுகாதார ஆய்வாளர் காளிராஜ் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சுதாரித்த அதிகாரிகள் அவர்களிடம் விவரமாக எடுத்துக்கூறி, மருத்துவ குழு உதவியுடன் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ குழுவினர் கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

corona virus Kovilpatti Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe