Advertisment

5 வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை; வைரலாகும் வீடியோ

Medical student  by jumping from 5th floor; A viral video

Advertisment

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்ஏனாத்தூர்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதியில் ஐந்தாவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்த தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் விளிம்பில் அமர்ந்து அழுது கொண்டிருந்த மாணவியை சிலர் கீழே இருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு காவல் துறையினர் வருவதற்குள் அந்த மாணவி கீழே குதித்துள்ளார். மாணவியை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அந்த மாணவியின் பெயர் ஷெர்லி என்றும், கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்தாவது மாடியில் இருந்து மாணவி குதிக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

incident kanjipuram police
இதையும் படியுங்கள்
Subscribe