Advertisment

சாப்பிடப் போனது ஒரு குத்தமா...? சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட மெடிக்கல் ஷாப்

Medical shop smashed by miscreants in Coimbatore

கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ளது எல்.ஐ.சி காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் அதே பகுதியில்மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாராயணனுக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்துள்ளது.

Advertisment

இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி மதியம் 1 மணியளவில்நாராயணன் தனது மெடிக்கல் ஷாப்பை பூட்டிவிட்டு மதிய சாப்பாட்டிற்காகவீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் வந்து பார்த்தபோது தனது மெடிக்கல் ஷாப் முழுவதும் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டு இருந்தது.

Advertisment

அதுமட்டுமல்லாமல் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மாத்திரைகள் அனைத்தும் தூக்கி சாலையில் வீசப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த நாராயணனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வது எனத்தெரியாமல் இருந்த நாராயணன் சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், நாராயணனின் மெடிக்கல் ஷாப்பை அடித்து துவம்சம் செய்த மர்ம நபர்கள் குறித்துபோலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்நாராயணனின் மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கும் மர்ம நபர்களின் அடையாளங்கள்அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்துஇந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர். இந்த சம்பவம்கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police Coimbatore
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe