Skip to main content

ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

medical seats quota obc supreme court judges today announced the judgements

 

 

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (26/10/2020) தீர்ப்பளிக்கிறது.

 

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில், 50% ஐ தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரியும், இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக்கோரியும் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாகேஷ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று (26/10/2020) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Admission Rally in Corporation School

திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி பாண்டமங்கலம் தெற்கு பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இதை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகா பெரியநாயகி மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர்  ஜான்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை லீலா லெட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

உதவி ஆசிரியைகள், எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், பி.டி.ஏ. உறுப்பினர்கள், ஐ.டி.கே தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.  2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை துவங்கப்பட்டது. எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடைபெற இருப்பதால் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற்று பயனடையுமாறு தலைமை ஆசிரியை லீலா லட்சுமி கேட்டுக் கொண்டார் முடிவில் உதவி ஆசிரியை தஸ்லீம் பல்கீஸ் நன்றி கூறினார்.

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Governor R.N. Ravi's trip to Delhi

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் நாளை அமைச்சராக பொன்முடி பதவியேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

Governor R.N. Ravi's trip to Delhi

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி நாளை பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.