/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madura (1)_16.jpg)
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (09/11/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? என்பதை கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 20- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)