ADVERTISEMENT

வாய்ப்பைத் தவறவிட்ட 4 மாணவர்களுக்கு மருத்துவ சீட்... நீதிமன்றம் உத்தரவு!

06:04 PM Dec 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கு முன், மருத்துவம் படிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட 4 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். சீட்டுகளை ஒதுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மருத்துவச் சேர்க்கை தொடர்பான வழக்கொன்றில், மருத்துவ சீட்டுக்கு அதிகம் செலவு செய்பவர்கள், சம்பாதிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் நிலையில், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அதிக மருத்துவர்கள் வருவார்கள் எனக் கருத்துத் தெரிவித்த நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட மருத்துவ சீட்டுகள் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப்படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கு முன், மருத்துவம் படிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட 4 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் சீட்டுகளை ஒதுக்கி வழங்க உத்தரவு பிறப்பித்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT