Advertisment

நீட் தேர்வால் அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம்!

Medical

நீட் மருத்துவ நுழைவு தேர்வு மூலம் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைத்திருக்கிறது.

Advertisment

நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் மொழியில் மட்டும் 24ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளின் உள்ள 2447 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அரசு பள்ளியை சேர்ந்த 4 பேர் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்வில் அரசு பள்ளியில் பயின்ற 2 மாணவருக்கு மட்டும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நீட் கடந்த ஆண்டு கலந்தாய்வில் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 3 அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு என மொத்தம் 5 பேருக்கு இடம் கிடைத்தது. இந்த ஆண்டு 4 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 26 அரசு உதவி பெரும் பள்ளி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ கிடைத்திக்கிறது.

நீட் தமிழ் வினா தாளில் 49 கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டு இருந்த சர்ச்சை கிளம்பி இருந்தது. தமிழ் வினாகள் பிழை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அரசு பள்ளிகளிலிருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும்.

neet exam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe