மருத்துவப் படிப்பு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

MEDICAL EDUCATION QUOTA SUPREME COURT TAMILNADU GOVERNMENT

மருத்துவப்படிப்பில் மாநிலங்களால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு மனுவில், 'அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்பில் 15%, மேற்படிப்பில் 50% இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை OBC, BC, MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi MEDICAL SEAT quota Supreme Court tn govt
இதையும் படியுங்கள்
Subscribe