Advertisment

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிப்.9- ஆம் தேதி கலந்தாய்வு!

medical course department counselling tamilnadu

மருத்துவம் சார்ந்தபடிப்புகளுக்கு பிப்ரவரி 9- ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Advertisment

மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9- ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது. பிப்ரவரி 9- ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும், பிப்ரவரி 10- ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மயக்கவியல், ரேடியாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு 38,244 பேர் விண்ணப்பித்ததில் 37,334 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரியில் 1,590, சுயநிதிக் கல்லூரிகளில் 13,858, அரசு ஒதுக்கீட்டில் 21,320 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. tnhealth.gov.inஎன்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

counselling Course Medical students
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe