மருத்துவக் கலந்தாய்வை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கல்வி இயக்ககம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு கல்லூரிகளில் 5 இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 112 இடங்கள்;பி.டி.எஸ்.படிப்பில் அரசுக் கல்லூரிகளில் 12, தனியார் பி.டி.எஸ். கல்லூரிகளில் 447 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியாக உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நிரப்ப மேலும் ஒருவார காலம் மருத்துவக் கலந்தாய்வை நீட்டிக்க வேண்டும். இந்த மனுவை அவசர மனுவாக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.