Advertisment

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி.-க்கு இடஒதுக்கீடு- மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

medical council OBC quota chennai high court

மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கும் வரை மருத்துவப் படிப்புக் கலந்தாய்வு நடத்தக்கூடாது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் ஒதுக்கும் இடங்களில் ஓ.பி.சி.-க்கு 50% இடஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரினர்.

Advertisment

இந்த வழக்கு இன்று (16/06/2020) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதிகள், "மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறிப்பது ஜூன் 22- ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

chennai high court medical counselling medical seats
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe