வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. பிற மாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும், கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சோம்நாத் நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MAHIL DERAN.jpg)
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் விதிமீறல் செய்திருந்தால் மருத்துவ கல்வி இயக்கமே விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் கூறினார். மேலும் மருத்துவ கலந்தாய்வில்பங்கேற்றமாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம்.அதே போல் கலந்தாய்வு முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதனை முழுமையாக ரத்து செய்து, புதிய கலந்தாய்வை நடத்துவது சாத்தியமில்லைஎன கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
  
 Follow Us