Advertisment

மனநல மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிகரிக்கக் கோரிய மனு!- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மன நல மருத்துவர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், அரசு மருத்துவக் கல்லூரிகளில், மனநல மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி வழக்கறிஞர் ரங்கநாயகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

medical colleges students admission chennai high high

அந்த மனுவில், தேசிய மனநல மருத்துவ மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் காரணமாக, ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிய வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன நல மருத்துவப் படிப்புகளுக்கு 2 முதல் 4 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்கப்படுவதாகவும், பல மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்பு பாடமாகச் சேர்க்கப்படவில்லை எனவும் குறை கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பிப்ரவரி 26- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தது.

chennai high court admission medical colleges
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe