சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தைப் போலவே, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம்வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறவழிப்போராட்டத்தை,அரசின்கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 25ஆம் நாள் போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கண்தானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 'மாணவர்களின் வாழ்வைப் பாதுகாக்க உடனடியாகதமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்','அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும்' எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.