Advertisment

மயிலாடுதுறையிலும் மருத்துவக்கல்லூரி! -மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் இருந்தால் அரசு பரீசிலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாட்டில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க மாநில அரசுகளின் பங்களிப்புடன் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

Medical College in Mayiladuthurai Central, state governments ordered to consider!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகை வருவாய் மண்டலத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை எதிர்த்தும், மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்கவும் உத்தரவிடக் கோரி, பாஜக வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குத் தொடர்பான சாத்தியக்கூறுகள் இருந்தால், மத்திய மாநில அரசுகள் அதைப் பரிசீலிக்கலாம் என்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

highcourt Mayiladuthurai medical college
இதையும் படியுங்கள்
Subscribe