Skip to main content

மருத்துவக்கல்லூரி வருமா? வராதா? -விருதுநகர் மாவட்ட வெறுப்பு அரசியல்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

“எல்லாமே தமிழ்நாட்டுல அரசியல் ஆயிருச்சு..” எனச்சொல்லும் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். “2011-ல் தமிழக முதல்வராக இருந்தார் கலைஞர். அரசாணை வெளியிடும்போது, காமராஜர் பிறந்த ஊரில் மெடிக்கல் காலேஜ் அமைக்கப்படும்னு சொன்னார். அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு,  கலைஞர் அறிவித்தபடி நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. சரி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு டென்டல் காலேஜ் அமைப்போம்'னு சொன்னார் ஜெயலலிதா. அதுவும் அறிவிப்போடு நின்றுபோனது. அதிமுக ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு எதுவும் வராது. எல்லாமே வெறும் வாய்ப்பேச்சுதான். அடுத்து பாருங்க.. திமுக ஆட்சிதான். ஏற்கனவே சொன்ன இடத்தில்.. கலெக்டர் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கிற வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கள் உள்ள இடத்துல மெடிக்கல் காலேஜ் வரும். அதோடு சேர்ந்து டென்டல் காலேஜும் வரும். மெடிக்கல் காலேஜுக்கான அத்தனை வசதிகளும் வந்துவிடும்.” என்கிறார்.

 

 medical college issue... Virudhunagar district hate politics!

 

ஆளும்கட்சி தரப்பிலோ,  “50 கோடி ரூபாய் செலவில் விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் 2017-ல் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி. இந்திய மருத்துவக்கல்லூரி விதிமுறைகளின்படி மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரி மட்டும் தொடங்கிவிட முடியாது. அனுமதி கிடைக்காது.  அதனால்தான், பல் மருத்துவக்கல்லூரி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. ஏற்கனவே, காரியாபட்டி அருகிலுள்ள முடுக்கன்குளத்தில் பல் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து திட்ட வரைவெல்லாம் அனுப்பிவிட்டார்கள். தமிழக அரசிடமிருந்து நிச்சயம் அனுமதி கிடைத்துவிடும். அதிமுக ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு மருத்துவக்கல்லூரியும் வரத்தான் போகிறது.  இதைவைத்து அரசியல் பண்ணுவது கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர்.தான்.” என்கிறார்கள்.  

திமுகவோ, அதிமுகவோ, என்ன அரசியல் வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளட்டும். விருதுநகர் மாவட்டத்துக்கு மருத்துவக்கல்லூரி வந்தால் சரிதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.