சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மதுரை, திருவள்ளூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள நொச்சிநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் இன்று (11/07/2020) நடத்தப்பட்டது.