sasikala

Advertisment

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உச்சி முதல் பாதம் வரை மருத்துவ முகாமை நடத்தினர் அமமுகவினர். சசிகலா பிறந்தநாளையொட்டி அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவுக்கு ஏற்ப, இந்த முகாம் நடத்தப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

sasikala

சிந்தாதிரிப்பேட்டையில் இன்று காலை இந்த முகாமை கட்சியின் பொருளாளரும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் தொடங்கி வைத்தார். இதில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வ.சுகுமார்பாபு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எல்.ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.