Advertisment

தமிழகத்தில் நாளை 5 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

hk

Advertisment

வடகிழக்கு பருவமழை கடந்த ஐந்து நாட்களாக தீவிரமாக பெய்த காரணத்தால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மழை நின்று 30 மணி நேரம் ஆன நிலையிலும், இன்னும் சென்னையில் 300க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகல் பாராமல் நீரை வெளியேற்றி வருகிறார்கள். இந்நிலையில் டிஎம்எஸ் வளாகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழகத்தில் வரும் சனிக்கிழமை 5 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 750 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த மருத்துவ இடங்கள் 9,150 ஆக அதிகரித்துள்ளது. நீட் மசோதா தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர் குடியரசுத்தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Ma Subramanian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe