குடியரசு தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்ட மருத்துவ சங்க மகளிரணியினர்

Medical Association women who plant saplings on the eve of Republic Day

குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் மகளிர் அணியினர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சிறப்பித்தனர். இதற்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவை தேவி தலைமை தாங்கினார். மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் பூர்ணிமா முன்னிலை வகித்தார்.

தலைவர் டாக்டர் ஜோதி, பொருளாளர் டாக்டர் சுகந்தி, டாக்டர் காவியா, அழகமுது, புனிதவதி, ஹன்னா மற்றும் பல மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சங்கீதா மற்றும் பலமருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவை இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் செல்வராஜ், செயலாளர் டாக்டர் குருநாத், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திருமாவளவன் ஆகியோர் பசுமை பயணம் குழுவினருடன் ஒருங்கிணைத்தனர்.

Doctors villupuram
இதையும் படியுங்கள்
Subscribe