Advertisment

முதல்வர் எடப்பாடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மோப்பநாய்... காவலர்களுக்கு பதக்கம் வழக்கும் விழா (படங்கள்) 

காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறையில் உள்ள மோப்பநாய் பூங்கொத்து அளித்து வரவேற்றது.

Advertisment

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும்விழாவில் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது காவல்துறையினரின்சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் காவல்துறையின் ஒரு பகுதியான மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த லிங்கா, லியோ, வாலி,ராக்கி, வீரா ஆகிய நாய்கள் காவல்துறையினருடன் சாகசங்களை நிகழ்த்தி காட்டின.

Advertisment

அப்பொழுதில் லிங்கா என்ற நாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.அதனைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கிச் சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

ops_eps tamilnadu police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe