Advertisment

புகார் அளிக்க சென்ற பெண்ணுடன் காவலரின் பழக்கம்? விரக்தியில் கணவர் தற்கொலை! 

ww

மதுரை எச்.எம்.எஸ்காலனியைச்சேர்ந்தமெக்கானிக்ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னியில் காவல்துறை எஸ்.ஐ இருக்கிறார் என்றுமெக்கானிக்கின்உறவினர்கள்கமிஷனரிடம்புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்தமெக்கானிக், குற்றஞ்சாட்டப்படும்எஸ்.ஐ-யிடம்பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில்வெளியாகிபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தபோது,மெக்கானிக்-கும்அவர் மனைவிக்குமிடையே சமீபகாலமாக வாய்த் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.எஸ்.எஸ்காலனிபோலீஸ்ஸ்டேஷனில்முன்பு பணிபுரிந்து தற்போது உளவுத்துறையில் பணியாற்றும்எஸ்.ஐ.யிடம்மெக்கானிக்கின்மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்த பழக்கம் தொடர்ந்துள்ள நிலையில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார்” என்கிறார்கள். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்தமெக்கானிக்சம்பந்தப்பட்டஎஸ்.ஐ-யிடம்பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில்பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

இருவரும் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் அந்தஆடியோவில், “வணக்கம் சார். புகார் கொடுக்க வந்த பெண்ணிடம்இப்படிபண்ணலாமா? பேசுவதில் தப்பில்லை. பேசுகின்ற விஷயம் தப்பாக உள்ளது. குடிப்பவன்ஆம்பளைஇல்லை என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள்இப்படிபண்ணினால் என்ன அர்த்தம்” என்கிறார்மெக்கானிக்.

மறுமுனையில்,எஸ்.ஐ பேசுகையில், “தப்பாக இருந்தால் மன்னித்துவிடு. இனிமேல் அப்படி நடக்காது” என்கிறார்.

மீண்டும்மெக்கானிக்பேசுகையில், “நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. ஒரேயொரு பிள்ளை. மது குடித்துவிட்டு அவளுடன் சண்டை போட்டது உண்மைதான். அதுபற்றி உங்களிடம் புகார் செய்யத்தானே வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகினால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். இன்று காலையிலிருந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும்எனக்குதெரியும். அவள் என்னிடம் இப்போதுவரை பொய் சொல்கிறாள். மனதளவில் நொந்துபோயுள்ளேன்” என்கிறார்.

பின்னர்எஸ்.ஐ பேசுகையில், “நடந்த விஷயங்களை மறந்துவிடு. இனி அப்படி நடக்காது” என்கிறார்.

மெக்கானிக்பேசுகையில் “தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் நடப்பது எல்லாம்எனக்குதெரியும். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது.கையெடுத்துகும்பிடுகிறேன். இத்தோடு விட்டுவிடுங்கள்” என்கிறார்.

எஸ்.ஐ பேசுகையில், “சரி, இனி அப்படி நடக்காது. உன்குடும்பத்தைசரியாகபார்த்துக்கொள்” என்கிறார்.

கடைசியாகமெக்கானிக்பேசுகையில், “புகார் கொடுக்க வந்தவளை நீங்கள்இப்படிபயன்படுத்தியிருக்ககூடாது. இந்த விஷயத்தைவெளிப்படையாகபேசி அவமானப்பட விரும்பவில்லை. இனிமெசேஜ்ஏதும் வேண்டாம்”எனசொல்கிறார்.

எஸ்.ஐ பேசுகையில், “இனி உன் குடும்பத்தைடிஸ்டர்ப்பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு” என்கிறார்.

இப்படிபேசியுள்ள ஆடியோ தற்போதுவைரலாகிவருகிறது. இது குறித்து மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இது குறித்து வந்த புகாரை விசாரிக்ககமிஷனர்உத்தரவிட்டுள்ளார்.ஆடியோவின்உண்மைத்தன்மை ஆய்வுசெய்யப்படுகிறது.குற்றம்சாட்டப்படும்எஸ்.ஐ-யிடமும்அந்தமெக்கானிக்குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

police madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe