
கன்னியாகுமரியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் பன்றி பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இறைச்சி கழிவுகளை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் அரசு அனுமதியின்றி பல்வேறு பன்றி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. தினசரி கேரளாவில் இருந்து பன்றி பண்ணைகளுக்கு டன் கணக்கில் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. சட்டவிரோதமாக இவ்வாறு கொண்டு வரும் இறைச்சி கழிவுகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதேபோல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதோடு நீர் நிலைகளிலும் மாசை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து மினி டெம்போவில் எடுத்து வரப்பட்ட கோழி இறைச்சி கழிவுகளை திருவரம்பு பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் மடக்கிப் பிடித்தனர்.