Advertisment

'இது மாதிரியான பேச்சுக்கே இங்கு இடமில்லை' - வைகோ திட்டவட்டம்!

MDMK VAIKO

2021 சட்டப்பேரவைத் தேர்தல் களம்,தற்போதேசூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும்,முதல்வர் வேட்பாளர்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க தனிச் சின்னத்தில்தான்போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்கிறார்களே? என்ற கேள்விக்கு, இவையெல்லாம் கற்பனையாகக் கேட்கப்படுகின்ற கேள்விகள், கற்பனையாக எழுதப்படுகின்ற எழுத்துகள். இது மாதிரியான பேச்சுக்கே இங்கு இடமில்லை. ம.தி.மு.க தனித்தன்மையோடு தான் போட்டியிடும். ம.தி.மு.க அதற்கென்று ஒரு தனிச் சின்னத்தைப் பெற்று அதில்தான் போட்டியிடும் என்றார்.

Advertisment

elections vaiko mdmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe