style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று திருப்பூர் வர இருக்கும் மோடியின் வருகையை எதிர்த்து திருப்பூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தில்தற்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதலே இங்குபோராட்டம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போதுமதிமுக தொண்டர்கள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கருப்பு கொடி போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.