Advertisment

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க அலுவலகமான தாயகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின் ம.தி.மு.க கொடி ஏற்றி, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.