Advertisment

மதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்!

MDMK headquarters incident

மதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை எழும்பூரில் மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகம் அமைந்துள்ளது. இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இருந்த பொருட்களைச் சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அந்த நபரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதே சமயம் தொடர்ந்து காவலர்கள் மதிமுக அலுவலகத்திற்கு உள்ளே சென்று மர்ம நபர் சேதப்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தனர்.

Advertisment

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கையில் கட்டையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் உள்ள 2வது மாடிக்குச் சென்ற அவர் அங்குள்ள பொருட்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளார். அதோடு அவர் அணிந்திருந்த ஆடையைக் கழற்றிவிட்டு ஆபாசமாகப் பேசியுள்ளார். மேலும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Egmore incident mdmk police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe