Advertisment

மாவட்ட தலைநகரத்தில்தான் மருத்துவக்கல்லூரி; மயிலாடுதுறையும் மாவட்டமாகும்...அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!!

"நாகப்பட்டினம் மாவட்ட தலைநகரத்தில் தான் மருத்துவக்கல்லூரி அமைக்கமுடியும், மயிலாடுதுறை இன்னும் மாவட்டமாகவில்லை," என்கிற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பேச்சு மயிலாடுதுறை மக்களை முகம்சுலிக்கவைத்துள்ளது.

Advertisment

mayiladuthurai soon to become a district

கடந்த சில மாதங்களாக தனிமாவட்டம் வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்த மயிலாடுதுறை கோட்ட மக்கள், மயிலாடுதுறை நகரத்தில் ஆங்காங்கே உள்வாங்கிக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் பக்கம் கவனத்தை செலுத்தி அதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்திற்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அரசு அறிவித்ததும் அந்த மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைத்திட வேண்டும் என போராட்டத்தை முன்னெடுத்து தொடரந்து நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த சூழலில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு தமிழக ஜவுளி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், அதிமுக நாகை மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.

தாலிக்கு தங்கம்வாங்கும் நிகழ்வுக்கு இடையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் ஓ,எஸ்,மணியனிடம் புதிய மருத்துவ கல்லூரியை நாகப்பட்டினத்தில் அமைக்கப்படுவதற்கு பதிலாக, மயிலாடுதுறையில் அமைக்கலாமே? நாகப்பட்டினத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூரில் ஒரு மருத்துவ கல்லூரி இருக்கிறதே. ஆனால் கொள்ளிடம், மணல்மேடு, மயிலாடுதுறை பகுதி மக்கள் எந்த மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்றாலும் 60 கிலோ மீட்டருக்கு குறைவில்லாமல் பயணம் செய்ய வேண்டியிருக்கிறதே என்கிற கேள்வியை முன்வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஓ, எஸ் மணியன், "இந்த மருத்துவ கல்லூரி மாவட்ட தலைநகருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அமைந்ததும் இங்கு மருத்துவக்கல்லூரி நிச்சயம் கிடைக்கும். விரைவில் மயிலாடுதுறையும் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்," என்று பதிலளித்தார்.

Mayiladuthurai Os Manian
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe