Advertisment

கேங்ஸ்டார் பாடலுக்கு டிக்டாக் வெளியிட்ட பிரண்ஸ் ஆப் போலிஸ் கைது

mayiladuthurai - sirkali

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்நிலைய வாயிலிருந்து கேங்ஸ்டார் பாடலுக்கு தனி ஆளாக வெளியேறுவது போல டிக் டாக் செய்து வெளியிட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Advertisment

கரோனா வைரஸால் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டிருந்தனர், பின்னர் படிப்படியாக தடைகள் தளர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பொதுமக்களை ஊரடங்கில் கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லாத பற்றாக்குறையை போக்க பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் உள்ளவர்களை இனம்கண்டு காவல்துறை சார்பில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களை உதவிக்காக பணியில் சேர்த்தனர்.

Advertisment

காவல்துறையில் காவலர்களோடு நின்று எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மறித்து கேள்வி கேட்டதை, தவறாக பயன்படுத்திக்கொண்டு பல பிரண்ஸ் ஆப் போலிஸார் பல தவறுகளை செய்துவருகின்றனர். அந்தவகையில் சீர்காழியை சேர்ந்த கமலகண்ணன் (23) என்பவர் சீர்காழி காவல் நிலையத்திலிருந்து தனிநபராக வெளியே வருவது போன்று செல்போனில் வீடியோ எடுத்து அதை கேங்ஸ்டார் பாடலுடன் கேங்கை கூட்டிட்டு வர்ரவன் கேங்க்ஸ்டர், ஒத்தையா வர்ரவன் மாஸ்டர் என்பது போன்ற வாசங்களோடு டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சீர்காழி போலீசார் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிக் டாக் வெளியிட்ட கமலக்கண்ணனை கைது செய்துள்ளனர்.

police sirkazhi Mayiladuthurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe