mm

மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே மனைவி மீதான நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை கழுத்தை நெரித்து கணவன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் கடந்த அகிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஐயப்பனுக்கு குடிபழக்கம் ஏற்பட்டுள்ளது. குடிபழக்கம் உள்ள ஐயப்பன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி அகிலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அகிலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு பேசுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை அகிலா திடீரென மயக்கம் அடைந்ததாக ஐயப்பன் குடும்பத்தினர், அகிலா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனே வந்து மருத்துவமனைக்கு அகிலாவை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

ஐயப்பன்தான் அகிலாவின் மரணத்திற்கு காரணம் என்று அகிலாவின் உறவினர்கள் புகார் கூறியதையடுத்து போலீசாரின் விசாரணையில் ஐயப்பன் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisment