mayiladuthurai fake gold issue two persons arrested by police 

Advertisment

குண்டுமணி மாலைகளைத்தங்கம் எனக்கூறி வணிகர்களிடம் நூதன முறையில்விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

வடமாநிலத்தைச் சேர்ந்ததேவூ (வயது 28), ராஜிவ் (வயது 48) ஆகிய இருவரும்கர்நாடக மாநிலத்தில்சில காலம் தங்கியிருந்து பணி செய்து வந்த நிலையில்., தற்போதுமயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளில் இவர்கள்நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்றதாக வணிகர்கள் இருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளைத்தேடி வந்தனர். இதனிடையே,தேவூ (28) , ராஜிவ் (48) ஆகிய இருவரும்தங்களுக்குப் புதையல் கிடைத்துள்ளதாக வணிகர்களிடம் கூறி பெரிய அளவிலான குண்டுமணி மாலைகளைக் காண்பித்துள்ளனர்.

மேலும் "இந்த தங்க குண்டுமணி மாலைகளை வெளியில் விற்பனை செய்தால் மாட்டிக் கொள்வோம்.தங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவிற்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் விற்பனை செய்வதாகவும்" வணிகர்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குண்டுமணி மாலைகளிலிருந்து 1 கிராம் மதிப்புள்ள இரண்டு குண்டு மணிகளை மட்டும் வணிகர்களிடம் கொடுத்து முழுவதும் தங்கத்தால் ஆன குண்டுமணி மாலைகள் என நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணமும், மற்றொருவர் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து குண்டுமணி மாலைகளை வாங்கியுள்ளனர். வாங்கிய பின்பு குண்டுமணி மாலைகளை வணிகர்கள் சோதித்தபோது அவை போலியானவை எனத்தெரிய வந்துள்ளது.

Advertisment

இதையடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வணிகர்கள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இன்று ரயில் மூலம் வெளியூருக்குத்தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகள் தேவூ, ராஜிவ் ஆகியோரை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலியான குண்டுமணி மாலைகளைத்தங்கம் எனக்கூறி வணிகர்களை நம்ப வைத்து வடமாநிலத்தவர்கள் ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.