Skip to main content

குற்றச் செயல்களுக்கு எதிராக அதிரடி காட்டும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

Mayiladuthurai District SP to taking  action against criminal activities

 

 

கஞ்சா விற்பனை, கள்ளச் சாராயம், ஆன்லைன் ரம்மி, தொடர் திருட்டு, கள்ள லாட்டரி என படுபாதகமான சூழலுக்குத் தள்ளப்பட்டுவந்த மயிலாடுதுறை மாவட்டத்தைத் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா.

 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம், மாப்படுகை, தரங்கம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப்பறந்தது. பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் கூடும் விளையாட்டு மைதானங்கள் எனக் குறிவைத்தே விற்பனை செய்தனர். கஞ்சாவை மிஞ்சிய நிலையில் கள்ளச் சாராயமும் இருந்துவருகிறது. இரண்டுக்கும் நிகராக ஆன்லைன் ரம்மியும், கள்ள லாட்டரியும் போட்டி போட்டுக்கொண்டு நடந்தது. இவைகள் ஒரு புறமிருக்க திருட்டுகளும் சத்தமே இல்லாமல் அரங்கேறிக்கொண்டிருந்தன. அனைத்து குற்றச் செயல்களும் கொடிகட்டிப் பறக்கத்தொடங்கியது. பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனைக்கு உள்ளாகினர்.

 

Mayiladuthurai District SP to taking  action against criminal activities

 

இந்த நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்ததும் புதிய மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றார் ஸ்ரீ நாதா. அவர் மக்களோடு மக்களாக பயணிக்க தொடங்கியதோடு குற்றச்செயல்களைத் தடுக்க தனி கவனம் செலுத்தினார். பொதுமக்களின் தகவலுக்கும், பத்திரிகையாளர்களின் தகவலுக்கும், சமூக ஆர்வளர்கள் தகவலுக்கும் ரகசியம் காத்து முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார். அதனால் கஞ்சா விற்பனை செய்த பலரையும் கைது செய்ததோடு, கஞ்சா விற்பனை செய்யப்பட்ட இடத்தில் "கஞ்சா விற்பனை குறித்து யாராவது தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும்," என விளம்பர பலகையும் வைக்கச்செய்தார்.

 

அதோடு கள்ள லாட்டரி விற்பனை செய்துவந்த பலரையும் அதிரடியாக கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டால் வெளியில் வராதபடி வழக்குப்பாயும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

 

Mayiladuthurai District SP to taking  action against criminal activities

 

"மாவட்ட எஸ்.பி.யின் அதிரடியால் பெரும்பாலானக் குற்றங்கள் குறைய தொடங்கி இருக்கிறது." என்கிறார் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர்.

 

அவர் மேலும் கூறுகையில், "கஞ்சா விற்பனையைவிட அதிகளவில் கள்ளச் சாராயமே வீதிக்கு வீதி விற்பனையாகுது. ஒவ்வொரு காவல் நிலைய பகுதிகளிலும் சில காவல்துறையினரின் மறைமுக அனுமதியோடு நடக்கிறது. புதுப்பட்டினம் காவல் நிலையம் பகுதியில் பட்டப்பகலிலேயே விற்பனை நடக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில், காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருப்புன் கூருக்கும் மன்னிப்பள்ளத்திற்கும் இடையே உள்ள சுடுகாட்டு பகுதியில் பாக்கெட் சாராய விற்பனை நடக்கிறது. மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடலங்குடியில்தான் காரைக்காலில் இருந்து பவுடர் கொண்டுவரப்பட்டு தனியாக உள்ள தோட்டத்தில் பாக்கெட் போடப்பட்டு பல இடங்களுக்கும் இரவு நேரங்களில் விநியோகிக்கப்படுகிறது. அப்படி விநியோகிக்கும் மொத்த வியாபாரி, மயிலாடுதுறையில் பல கோடி மதிப்பீட்டில் வீடு கட்டிவருகிறார். அவர் மீது இதுவரை ஒரு வழக்குகூட போடாமல் மிக கவனமாக பார்த்துக்கொள்கின்றனர் காவல்துறையினர். கள்ளச்சாராயத்திற்கும் மாவட்ட எஸ்.பி. அதிரடி காட்டினால் கிராமப்புற ஏழை பெண்களை வறுமையில் இருந்து காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுத்தை நடமாட்டம்; 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Leopard movement; Holiday notification for 9 schools

இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இரண்டு நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை தீயணைப்புத் துறையினர் என மொத்தம் 61 பேர் சிறுத்தை தேடுதல் வேட்டையில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி நாளை (04/04/2024) அந்த  உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘ஆபாச வீடியோவை வெளியிடுவோம்’ - ஆதீனத்தை மிரட்டிய பா.ஜ.க மாவட்டத் தலைவர்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
 BJP district president threatens Adinath in mayiladurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த நிலையில், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.